நாமக்கல் A.S.பேட்டை ஸ்ரீ செல்வ விநாயகர் ஸ்ரீபகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா! திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்!

சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

Update: 2024-10-23 13:07 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல்,A.S. பேட்டை , ஸ்ரீ செல்வ விநாயகர் , ஸ்ரீ பகவதி அம்மன் ஆலய கும்பாபிஷேக விழா நடைபெற்றது. இந்த விழாவையொட்டி, கடந்த 4–ஆம் தேதி முகூர்த்த கால் நடுதலும், 10–ஆம் தேதி முளைப்பாரி இடுதலும், 18–ஆம் தேதி மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து புனிதநீர் கொண்டு வருதலும், 19–ஆம் தேதி வாஸ்து சாந்தி, காப்பு கட்டுதல், முதல்கால யாக பூஜை உள்ளிட்டவை நடைபெற்றது. 20–ஆம் தேதி இரண்டாம் கால யாகபூஜையும், மதியம் அஷ்டபந்தன மருந்து சாற்றுதல் நிகழ்ச்சியும், மூன்றாம் கால யாகபூஜையும் நடைபெற்றது. திங்கள்கிழமை காலை 6.35 மணிக்கு நான்காம் கால யாக பூஜையுடன் மகா தீபாரதனையும், 9.15 மணிக்கு மங்கள இசையுடன் கடம் புறப்பாடும், காலை 9.45 மணிக்கு சிவாச்சாரியார்கள் விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி குடமுழுக்கை நடத்தினர். இதனைத் தொடர்ந்து பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த விழாவில் ஏராளமானோர் கலந்து கொண்டு கோபுர தரிசனம் செய்தனர். பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து 24 நாட்கள் மண்டல பூஜை கட்டளைத்தாரர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

Similar News