50 தலித் பெண் விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்கும் நிகழ்ச்சி..

திடுமலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 50 தலித் பெண் விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்கப்பட்டது.

Update: 2024-10-23 14:57 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
பரமத்தி வேலூர்,அக்.21:  ஏசிசிடபுள்யூ  மற்றும் நாமக்கல்,பொத்தனுர் வேர்டு நிறுவனமும் இணைந்து  கபிலர் மலை வட்டாரத்தில் உள்ள 50 தலித் பெண் விவசாயிகளுக்கு எட்டு வகையான காய்கறி மற்றும் கீரை விதைகள் நபர் ஒருவருக்கு 400 கிராம் வழங்கும் நிகழ்ச்சி திடுமல் சுய உதவிக் குழு கட்டிடம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் வேர்டு நிறுவன செயலர் மு.சிவகாமவல்லி அவர்கள் வரவேற்று பேசினார். பாக்யராஜ் கிராமியம் அந்தியூர்தொகுத்து வழங்கினார். இந்நிகச்சிக்கு பொருளியல் துறை தலைவர்  முனைவர்.பெ.லோகநாதன் தலைமை வகித்து பேசியதாவது: ஏழை எளிய மக்களுக்கு அதிலும் குறிப்பாக பெண் விவசாயிகளுக்கு காய்கறி மற்றும் கீரை விதைகள் வழங்குவது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் எனவும் அதுமட்டுமின்றி வேர்டு நிறுவனம் ஏழை எளிய மக்களுக்கு கடந்த 34 ஆண்டுகளாக சேவை புரிந்து வருகிறது. இத்துடன் இயற்கை வேளாண்மையை ஊக்குவித்தல், மகளிருக்கு சிறுதொழில் தொடங்குவது போன்ற பல கிராமப்புற பெண்களின் வாழ்க்கை மேம்பட வழி வகுத்துள்ளனர். மென்மேலும் இவர்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் தெரிவித்து பேசினார். தொர்ந்து நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றிய தோட்டக்கலை துறைஉதவி அலுவலர்  நவநீத கிருஷ்ணன் வேர்டு நிறுவனம் பெண்களுக்கு தகுந்த நேரத்தில் விவசாயம் சார்ந்த விதைகளை  வழங்கியுள்ளது தற்போது மழைக்காலம் என்பதால் உடனடியாக விதைக்கும் படியும் இதேபோல் தோட்டக்கலை துறையின் மூலம் வழங்கும் மானியம் மற்றும் உதவிகள் பற்றியும் சிறப்புரையாற்றினார். அவரைத் தொடர்ந்து அடுத்து வந்து உரையாற்றிய ராஜாமணி முன்னாள் தொழில்நுட்ப வல்லுநர் விவேகானந்த கேந்திரம் ஆகியோர் இயற்கை முறையில் விவசாயம் செய்வதில் உள்ள பயன்கள் மற்றும் நன்மைகள் பற்றியும் கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக கிடைக்கும் மூலிகை மகத்துவம் கொண்ட கீரைகளை எடுத்துக் கொள்ளும்படி  பயனாளர்களிடம் உரையாற்றினர். இறுதியில் வேர்டு நிறுவன களப்பணியாளர் லட்சுமணன் நன்றி கூறினார்.

Similar News