டிரினிடி கல்லூரியில் பெண்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மோகனூர் சாலையில் அமைந்துள்ள டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மகளிர் மேம்பாடு சிக்கல்கள் வாய்ப்புகள் மற்றும் சவால்கள் என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-10-23 11:42 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் டிரினிடி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் NSS, YRC, RRC, உன்னத் பாரத் அபியான் மற்றும் டிரினிடி மகளிர் மன்றம் ஆகிய அமைப்புகளின் சார்பில் 'மகளிர் மேம்பாடு - சிக்கல்கள், வாய்ப்புகள் மற்றும் சவால்கள் ' என்ற தலைப்பிலான விழிப்புணர்வு நிகழ்ச்சி இன்று கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் முதன்மை விருந்தினராக நாமக்கல் மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலர் சார்பு நீதிபதி G. K. வேலுமயில் கலந்து கொண்டார். மற்றொரு சிறப்பு அழைப்பாளராக குழு வழக்கறிஞர் R R ரேவதி கலந்து கொண்டு பேசினார். மகளிருக்கான உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சட்டங்கள் போன்றவை குறித்தும், மகளிர் வங்கிக் கடன் பெறும் முறைகள் குறித்தும் இந்நிகழ்வில் அவர்கள் பேசினர்.

Similar News