இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பத்தில் கதவணை-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி குழுதலைவர் விளக்கம்.

இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பத்தில் கதவணை-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி குழுதலைவர் விளக்கம்.

Update: 2024-10-23 11:43 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
இந்தியாவிலேயே புதிய தொழில்நுட்பத்தில் கதவணை-தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி குழுதலைவர் விளக்கம். தமிழ்நாடு சட்டமன்ற பேரவை அரசு உறுதி குழுதலைவர் வேல்முருகன் தலைமையிலான குழுவினர் என்று புகழுரை காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் கதவணையை ஆய்வு செய்தனர். ஆய்வின் நிறைவில்செய்தியாளர்களை சந்தித்த வேல்முருகன், புகழூரில் காவிரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட்டு வருவதை ஆய்வு மேற்கொண்டோம். இந்தியாவிலேயே புதிய யுக்தியை பயன்படுத்தி இந்த கதவணை கட்டப்பட்டு வருவதாலும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டு வருவதாலும் பணிகள் முடிக்க கால தாமதம் ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். விரைந்து பணிகளை முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர இந்த குழு அறிவுறுத்தியுள்ளது. திட்டமதிப்பீட்டை கூடுதலாக கட்டுமானப் பணிக்கு தேவைப்படுவதால் அதற்காக அரசின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதை காரணம் காட்டி, பணிகளை நிறுத்தக் கூடாது என ஒப்பந்ததாரர்களுக்கும், அதிகாரிகளுக்கும் உத்தரவிடபட்டுள்ளது. மேலும், தமிழ்நாட்டில் பல்வேறு அணைகளில் ஷட்டர்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிகழ்வுகள் நடந்துள்ளது. அது போல் இல்லாமல் தரமாகவும், அணையில் தண்ணீரை முழுக் கொள்ளளவை தேக்கி வைத்து ஷட்டர்களின் உறுதி தன்மையை உறுதி செய்ய வேண்டும், குறிப்பாக ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட மேட்டூர் அணை மற்றும் முல்லைப் பெரியார் அணை போன்று உறுதியாக இருக்க வேண்டும் என்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், எம்எல்ஏக்கள் அரவிந்த் ரமேஷ், அருள், சீனிவாசன், மாங்குடி, மோகன், இளங்கோ, சிவகாமசுந்தரி உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Similar News