ராசிபுரம் நகரில் மறியல் செய்த பாமகவினர் 50 பேர் கைது..

ராசிபுரம் நகரில் மறியல் செய்த பாமகவினர் 50 பேர் கைது..

Update: 2024-11-27 14:37 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாமகவினர் 50 பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். பாமக நிறுவனர் ராமதாஸ் குறித்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாமகவினர் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனையடுத்து நாமக்கல் மாவட்ட பாமக செயலர் ஒ.பி.பொன்னுசாமி தலைமையில் திரளான பாமகவினர் ராசிபுரம் புதிய பேருந்து நிலையம் முன்பாக ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் மாணவரணிச் செயலர் டி.பாலு வரவேற்றார். மாநில இளைஞரணி செயலர் ச.வடிவேலன் முன்னிலை வகித்தார். கட்சியினர் பலரும் தமிழக முதல்வருக்கு எதிராக கோஷமெழுப்பினர். தொடர்ந்து பஸ் நிலையம் முன்பாக மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து காவல் துறையினர் அனைவரையும் கைது செய்து வாகனத்தில் ஏற்றி அழைத்துச் சென்று தனியார் திருமண மண்டபத்தில் தங்கவைக்கப்பட்டனர். இதில் ராசிபுரம் நகர பாமக தலைவர் க.மணிகண்டன், வன்னியர் சங்க செயலர் கே.கே.மாரிமுத்து, தொழிற்சங்க நிர்வாகி முத்துவேல், மாவட்ட வன்னியர் சங்க நிர்வாகி பன்னீர்செல்வம், நாமகிரிப்பேட்டை கிழக்கு ஒன்றியம் இ. கே.பெரியசாமி, நாமகிரிப்பேட்டை மத்திய ஒன்றியம் எஸ் என் நாகராஜன், நாமகிரிப்பேட்டை மேற்கு ஒன்றியம் வரதராஜன், ராசிபுரம் கிழக்கு ஒன்றியம் தியாகராஜன், ராசிபுரம் மேற்கு விஜயபாஸ்கர், நாமகிரிப்பேட்டை பேரூர் அம்மையப்பன், வெண்ணந்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன், வெண்ணந்தூர் பேரூர் செயலாளர் வடிவேல், சேந்தமங்கலம் பெருமாள் மாநில செயற்குழு உறுப்பினர், சேந்தமங்கலம் வடக்கு ஒன்றியம் பாஷா சின்னையம், மாவட்ட பொறுப்பாளர்கள் ரவி ,காசிலிங்கம், முருகேசன், சீனிவாசன் ,செல்வம், பிரேம், சுரேஷ் , ராசிபுரம் பூக்கடை மாது, கணேசன் மாணவர் சங்க மாவட்ட செயலாளர் குமார், வன்னியர் சங்க ஒன்றிய தலைவர் பொன்னுசாமி, நகர துணைச் செயலாளர் பி.மோகன செட்டியார், துணைச் செயலாளர் ஆர். குமரேசன், வேம்பு, கிழக்கு ஒன்றிய வன்னியர் சங்க செயலாளர் வேம்பன், வெண்ணந்தூர் பொறுப்பாளர்கள் சண்முகம், மணிகண்டன், சுரேஷ்குமார், ராமு, தங்கதுரை, சுந்தர், ரத்தினம், சதீஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Similar News