திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகின்றது. அந்த வகையில் இன்று காலை நிலவரப்படி மாவட்டத்தில் 55.80 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதில் அதிகபட்சமாக நாலுமுக்கு பகுதியில் 14 மில்லி மீட்டரும்,ஊத்து பகுதியில் 10 மில்லி மீட்டரும், காக்காச்சி பகுதியில் 8 மில்லி மீட்டரும் மழை பதிவாகியுள்ளது.