தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 6-ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி நடைபெற்றது.

தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 6-ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி நடைபெற்றது.

Update: 2024-08-07 05:10 GMT
தமிழக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 6-ம் ஆண்டு நினைவு தின அமைதி பேரணி நடைபெற்றது. தமிழக முன்னாள் முதலமைச்சர், திமுக முன்னாள் தலைவரும் ஆன மு.கருணாநிதி ஆறாம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் திமுகவினர் அமைதி பேரணி நடத்தி புகழ் அஞ்சலி செலுத்தினர். இதன் அடிப்படையில் கரூர் அறிவாலயத்தில் இருந்து கட்சியின் நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சிவகாமசுந்தரி, கரூர் மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் மாவட்ட அளவிலான பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என சுமார் 1000 பேர் பேரணியில் கலந்து கொண்டனர். இந்த பேரணி கரூர் பேருந்து நிலையம் உண்டானவை பலம் வந்து கரூர்-கோவை சாலையில் அமைக்கப்பட்ட அலங்கார மேடையில், அமைக்கப்பட்டு இருந்த மறைந்த தலைவர் கலைஞர் கருணாநிதி திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து மலர்கள் தூவி புகழஞ்சலி செலுத்தினர். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மறைந்த தங்களது தலைவருக்கு தங்களது இதய அஞ்சலியை செலுத்தினர்.

Similar News