அண்ணா நகரில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூ.1230 பறிமுதல்.
அண்ணா நகரில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூ.1230 பறிமுதல்.;
அண்ணா நகரில் பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது. ரூ.1230 பறிமுதல். கரூர் மாவட்டம் சின்னதாராபுரம் காவல் எல்லைக்குட்பட்ட அண்ணா நகர் பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக காவல் உதவி ஆய்வாளர் ராஜ்குமாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சனிக்கிழமை இரவு 9 மணி அளவில் அண்ணாநகர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அருகில் உள்ள சீத்தக்காடு பகுதியில் பணம் வைத்து சூது ஆடுவது கண்டறியப்பட்டது. இந்த சூதாட்டத்தில் ஈடுபட்ட காட்டாம் புதூரைசேர்ந்த ,ஜெகன் ,ஆறுமுகம், அரவிந்த்கார்த்திக்,தேர் வீதியைச் சேர்ந்த ராஜ்குமார் , அக்ரஹாரம் பகுதியைச் சேர்ந்த கார்த்திகேயன் நடுப்பாளையத்தை சேர்ந்த சந்தானம் உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்து அவர்கள் சூதாட பயன்படுத்திய 52 சூதாட்ட அட்டைகளையும் ரூபாய் 1230-ஐ பறிமுதல் செய்தனர். பின்னர் 6 பேர் மீதும் வழக்கு பதிவு செய்த சின்ன தாராபுரம் காவல்துறையினர் அவர்களை காவல் நிலைய பிணையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.