ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.

நாமக்கல் மாவட்டம், இராசிபுரம், சேந்தமங்கலம், திருச்செங்கோடு, பரமத்தி ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் மாவட்ட ஆட்சியர் தலைமையில், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.மூர்த்தி முன்னிலையில் 74 பள்ளிகளைச் சேர்ந்த 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.;

Update: 2025-12-03 13:59 GMT

 தமிழ்நாடு முதலமைச்சர்   அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலன் கருதி பல்வேறு சிறப்பு திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகின்றார்கள். நமது திராவிட மாடல் ஆட்சியில் மாணவ, மாணவியர்கள் சமுதாயத்தில் கல்வி அறிவு, வேலைவாய்ப்பு பெற்று அதன் மூலம் சிறந்த வாழ்வாதாரத்தை பெற்றிட வேண்டும் என்ற நோக்கத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடர்ந்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்கள். புதிய முயற்சிகள் மூலமாக பள்ளிக்கல்வித்துறை, உயர்கல்வி துறை, தொழில் துறைகளில் கல்வியை அடிப்படையாக கொண்டு, வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் தமிழ்நாட்டில் வளர்ச்சியை நிகழ்த்தியுள்ளார்கள். கொரோனா தொற்று காலத்தில், மாணவர்களின் கல்வி தடைபடக்கூடாத என்பதற்காக அவர்களின் இல்லத்திற்கே வந்து கல்வியை வழங்கும் இல்லம் தேடி கல்வி திட்டத்தினை அறிமுகப்படுத்தினார்கள்.அதேபோல எண்ணும் எழுத்தும் திட்டம், நான் முதல்வன் வழிகாட்டி திட்டம், முதலமைச்சர் கோப்பை, விளையாட்டு மைதானம், பள்ளி குழந்தைகள் நூலகங்களை திறம்பட பயன்படுத்துவதற்காக சிறந்த முறையில் மாநிலம் முழுவதும் பல்வேறு நூலகங்கள், ஊராட்சிகளில் சிறிய நூலகங்கள் என பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அனைவரும் கல்வியில் முன்னேற வேண்டும் என்பதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறார்கள். அரசு மாணவ, மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தினை வழங்கியவர் நமது முதலமைச்சர் அவர்கள். இதன் மூலம் அரசு மாணவர்கள் விமானத்தில் வெளி நாடுகளுக்கு அழைத்து சென்று அங்குள்ள உயர்ந்த பல்கலை கழகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறையின் சார்பில் ரூ.3.00 கோடி மதிப்பீட்டில் முதலமைச்சரின் சிறு விளையாட்டு அரங்கம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.இராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் பல்வேறு சிறப்பு வாய்ந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும், இராசிபுரத்தில், ரூ.35 கோடி மதிப்பீட்டில் 600 தகவல் தொழிற்நுட்ப வல்லுநர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் மினி டைடல் பூங்கா அமைக்க அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. எனவே மாணவர்கள் நல்ல ஒழுங்கங்களை கற்று சிறந்த மாணவர்களாக திகழ்வதோடு, ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களை பெருமை படுத்த வேண்டும் என மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன்   தெரிவித்தார்.இன்றைய தினம் மாண்புமிகு ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் மருத்துவர் மா.மதிவேந்தன் அவர்கள், இராசிபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராசிபுரம் நகராட்சி அண்ணா சாலை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 998 மாணவர்களுக்கும், 1055 மாணவியர்களுக்கும், சேந்தமங்கலம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சேந்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 807 மாணவர்களுக்கும், 832 மாணவியர்களுக்கும், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருச்செங்கோடு அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 1024 மாணவர்களுக்கும், 1096 மாணவியர்களுக்கும், பரமத்தி வேலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பாண்டமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 380 மாணவர்களுக்கும், 890 மாணவியர்களுக்கும் என மொத்தம் 6639 மாணவ, மாணவியர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் வெண்ணந்தூர் அட்மா குழு தலைவர்  ஆர்.எம்.துரைசாமி, நகர்மன்ற தலைவர்கள்   கவிதா சங்கர் (இராசிபுரம்),   நளினி சுரேஷ்பாபு (திருச்செங்கோடு), பேரூராட்சி தலைவர்கள்  சித்ரா தனபாலன் (சேந்தமங்கலம்), .வி.எஸ்.எஸ்.சோமசேகர் (பாண்டமங்கலம்), முதன்மை கல்வி அலுவலர்  அ.சு.எழிலரசி, மாவட்ட கல்வி அலுவலர் (இடைநிலை) கு.சி.புருசோத்தமன், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஆசிரியர் பெருமக்கள் மற்றும் மாணவ,மாணவியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

Similar News