திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழாவில் SP பங்கேற்பு

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழாவில் SP பங்கேற்பு

Update: 2024-07-29 09:49 GMT
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 வது விளையாட்டு தின விழாவில் SP பங்கேற்பு திருப்பத்தூர்மாவட்டம் திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் 69 ஆவது விளையாட்டு தின விழா நடைபெற்றது. இவ்விழாவில் கல்லூரியின் முதல்வர் அருட்தந்தை முனைவர் மரிய அந்தோணிராஜ் வரவேற்புரை ஆற்றினார். விழாவிற்கு வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் செந்தில் J.வேல்முருகன், திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜான் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரை நிகழ்த்தினார்கள். கல்லூரி மைதானத்தில் மாணவ மாணவிகளுக்கான தடகளப்போட்டி நடைபெற்றது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர்கள் கோப்பைகளையும் மற்றும் பதக்கங்களையும் வழங்கி சிறப்பித்தார்கள். கல்லூரியின் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை முதல் பிரிவில் வணிகவியல் துறையும் இரண்டாம் பிரிவில் வரலாற்று துறையும் இடம் பிடித்தன. கல்லூரியின் உடற்கல்வி இயக்குநர் முனைவர் ஏ.பெண்டோ தேவராஜ் நன்றியுரை ஆற்றினார். மேலும் இந்நிகழ்வு சிறப்பு அமைய உதவி உடற்கல்வி இயக்குனர் சி.கவியரசு உடனிருந்தார். இவ்விளையாட்டு விழாவில் கல்லூரி செயலாளர் அருட்தந்தை முனைவர் பிரிவின் பீட்டர், கூடுதல் முதல்வர் அருட் தந்தை முனைவர் மரிய ஆரோக்கியராஜ், துணை முதல்வர்கள் தந்தை முனைவர் தியோஅக்ஃபில் ஆனந்த், மற்றும் முனைவர் சாம்சங் சண்முகம் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் அருட்தந்தை முனைவர் ஜான் போர்க், பொருளாளர் தந்தை முனைவர் சத்யநாதன், உள்ளிட்ட பிற அருட்தந்தையர்கள், இருபால் துறைத் தலைவர்கள் கல்லூரி பேராசிரியர்கள் மாணவ மாணவிகள், பெற்றோர்கள் உட்பட பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Similar News