ஏமூரில் மாடு திருடிய இளைஞன் கையும் களவுமாக கைது. 7 மாடுகள் மீட்பு.

ஏமூரில் மாடு திருடிய இளைஞன் கையும் களவுமாக கைது. 7 மாடுகள் மீட்பு.

Update: 2024-10-03 07:25 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
ஏமூரில் மாடு திருடிய இளைஞன் கையும் களவுமாக கைது. 7 மாடுகள் மீட்பு. கரூர் மாவட்டம், தாந்தோணிமலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, மருதை நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தகுமார் வயது 36. இவர் அப்பகுதியில் விவசாயியாக பணியாற்றி வருகிறார்.மேலும், மாடுகளையும் வளர்த்து வருகிறார். அக்டோபர் 1ஆம் தேதி மாடுகளை மேயச்சலுக்கு பிறகு மதியம் 1:30 மணி அளவில், ஆனந்த குமாருக்கு சொந்தமான குத்தகை நிலத்தில் மாடுகளை கட்டி வைத்துவிட்டு வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போதுஅங்கு வந்த, தாந்தோணி மலை, காமராஜ் நகர் பகுதியை சேர்ந்த முனியப்பன் மகன் ரெவி என்கிற பிரவீன் வயது 19 என்ற இந்த இளைஞன், கட்டி வைத்து இருந்த 7- மாடுகளையும் களவாட முயன்று உள்ளார். அப்போது, அதனைக் கண்ட அப்பகுதி பொதுமக்கள் ஆனந்த குமாருக்கு தகவல் அளித்துவிட்டு, களவாட வந்த பிரவீன் குமாரை கையும் களவுமாக பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். இந்த திருட்டு தொடர்பாக, ஆனந்தகுமார் அளித்த புகாரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர்,ரெவி என்கிற பிரவீனை கைது செய்து களவாடா இருந்த ரூ.2,80,000- மதிப்புள்ள 7- மாடுகளையும் மீட்டனர். மேலும் , பிரவீன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டனர் தாந்தோணிமலை காவல்துறையினர். சிறையில் அடைக்கப்பட்ட பிரவீன் சைபர் செக்யூரிட்டி பி்.இ.2-ம் ஆண்டு படித்த அவர், தனது படிப்பை பாதியிலேயே கைவிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News