பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்த 7 பேர் கைது
குமாரபாளையம் அருகே பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்த 7 பேர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையம் கோட்டைமேடு பட்டத்தரசியம்மன் கோவில் அருகிலும், தட்டான்குட்டை வாய்க்கால் அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. நேரில் சென்ற இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜன் உள்ளிட்ட போலீசார், சூர்யா, 20, அருண், 21, தரண், 20, திலகர், 21, ஆகியோர் கோட்டைமேடு பட்டத்தரசியம்மன் கோவில் அருகிலும், கார்த்தி, 34, மணி, 25, நந்தகுமார், 38, ஆகியோர் தட்டான்குட்டை வாய்க்கால் அருகிலும், பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் மது குடித்துகொண்டிருந்த 7 நப்ர்கலஐம் கைது செய்தனர்.