இராசி அமுத சுரபி அறக்கட்டளை மற்றும் ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ இணைந்து 77 குடியரசு தின விழா கொண்டாடினர்...

இராசி அமுத சுரபி அறக்கட்டளை மற்றும் ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ இணைந்து 77 குடியரசு தின விழா கொண்டாடினர்...;

Update: 2026-01-26 12:43 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் இராசி அமுத சுரபி அறக்கட்டளை மற்றும் ஜே சி ஐ ராசிபுரம் மெட்ரோ இணைந்து 77.வது குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. ராசிபுரம் பூக்கடை வீதியில் நடைபெற்ற இவ் விழாவில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் தலைவர் ஜேசி.சதீஷ்குமார் அவர்கள் தேசியக்கொடி ஏற்றினார் . தொடர்ந்து ராசி அமுத சுரபி அறக்கட்டளையின் கௌரவத் தலைவர் திரு.முன்னாள் கவுன்சிலர் வி.பாலு, அவர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி சிறப்பித்தார். மேலும் இவ்விழாவில் ராசிபுரம் பகுதியில் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்ட தியாகிகளின் வாரிசுகள் மற்றும் முன்னாள் ராணுவ வீரர்கள் கௌரவிக்கப்பட்டனர். இந் நிகழ்வில் ஜேசிஐ ராசிபுரம் மெட்ரோவின் உறுப்பினர்கள் ரமேஷ், ராகுல்,மணிகண்டன், தீபிகா,ராசிபுரம் மெட்ரோவின் முன்னாள் தலைவர்கள் பூபதி மற்றும் சதீஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். ராசி அமுதசுரபி அறக்கட்டளை அறங்காவலர்கள் முத்துசாமி மற்றும் ரமா, ராசிபுரம் வழக்கறினர் சங்கத் தலைவர் திரு. சதீஷ்குமார், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்..

Similar News