புதன்சந்தை அருகே புதிய பேருந்து துவக்க விழா: மாதேஸ்வரன் எம்பி பங்கேற்பு
புதிய வழித்தட பேருந்து துவக்க விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.;
பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் ஏற்பாட்டில் நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதன்சந்தை, நைனாமலை வழியாக சேந்தமங்கலம் மற்றும் நாமக்கல் மரூர்பட்டி, பொட்டணம் வழியாக சேந்தமங்கலம் செல்லவும் நடைபெற்ற புதிய வழித்தட பேருந்து துவக்க விழாவில் நாமக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மாதேஸ்வரன் எம்பி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேருந்தினை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.இந்நிகழ்வில் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் நாமக்கல் தெற்கு மாவட்ட பொருளாளர் சசிகுமார், நாமக்கல் தெற்கு மாவட்ட இணை செயலாளர் தமிழரசு, நாமக்கல் தெற்கு மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் கந்தசாமி, புதுச்சத்திரம் தெற்கு ஒன்றிய செயலாளர் வேல்முருகன், குணசேகரன், திமுக ஒன்றிய செயலாளர் ஜெயப்பிரகாஷ், மின்னாம்பள்ளி முன்னாள் தலைவர் ராஜேந்திரன், தர்மலிங்கம், பொன்னுசாமி, போக்குவரத்து துறை கிளை மேலாளர், கிளை செயலாளர்கள், தீரன் தொழிற்சங்கம் சுரேஷ், சேகர் உள்ளிட்ட மாவட்ட ஒன்றிய நகர கிளை நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.