குளித்தலையில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் உயிரிழப்பு
ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த சிறுவன் உயிரிழந்த சோகம்;
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே இனுங்கூர் கிழக்கு குப்பு ரெட்டிப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பழனிச்சாமி மகன் மகேஸ்வரன் (13). இவர் பெட்டவாய்த்தலையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வந்தார். இன்று காலை அப்பகுதியில் உள்ள வீரமலை என்பவரது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அவரை மீட்டு பணிக்கம்பட்டி தனியார் மருத்துவமனையில் சேர்த்த போது மருத்துவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். அதனையடுத்து குளித்தலை அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு சிறுவனின் உடல் வைக்கப்பட்டது. இதுகுறித்து சிறுவனின் தாயார் தீபா அளித்த புகாரின் பேரில் நங்கவரம் போலீசார் இன்று வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.