சுய உதவி குழுக்களின் பகுதி அளவிலான பொதுக்குழுக் கூட்டம்
குமாரபாளையத்தில் அனைத்து சுய உதவி குழுக்கள் பங்கேற்ற வாகை சூடி அமைப்பின் பகுதி அளவிலான பொதுக்குழுக் கூட்டம் நடந்தது.;
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் இயங்கும் குமாரபாளையம் நகராட்சியில், வாகை சூடி அமைப்பின் பகுதி அளவிலான கூட்டமைப்பின் பொதுக்குழுக் கூட்டம் நடந்தது. இதில் அனைத்து சுய உதவி குழுவினரும் பங்கேற்றனர். இதில் சமுதாய அமைப்பாளர்கள் ரகு ,மற்றும் கவுசல்யா பங்கேற்று, உங்கள் கனவை சொல்லுங்க, என்ற திட்டம் குறித்து விபரமாக எடுத்து கூறினார்கள். அனைத்து குழு உறுப்பினர்களும் காப்பீடு செலுத்த வேண்டும் என்று, நிர்வாகி மகாலட்சுமி அறிவுறுத்தினார். இதற்கான ஏற்பாடுகளை நிர்வாகி நாராயணி செய்திருந்தார்.