திருத்தேர் வடம் பிடித்தலின் 8 ஆம் நாள் திருவிழாவில் செங்குணம் மகா மாரியம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி.
அம்மனுக்கு வழிபாடு மேற்கொண்டு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.;
திருத்தேர் வடம் பிடித்தலின் 8 ஆம் நாள் திருவிழாவில் செங்குணம் மகா மாரியம்மன் திருவீதியுலா நிகழ்ச்சி. பெரம்பலூர் வட்டம் செங்குணம் கிராமத்தில் வீற்றிருக்கும் அருள்மிகு மகா மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவின் திருத்தேர் வடம் பிடித்து இழுத்து நிகழ்ச்சி கடந்த 2025 சூலை 28 அன்று நடைப்பெற்றது. இதினிடையே ஆகஸ்ட் 4 நேற்று திருத்தேர் வடம் பிடித்தலின் 8 ஆம் நாள் திருவிழா நேற்று இரவு நடைப்பெற்றது. ஆலயத்தில் அம்மனுக்கு வழிபாடு மேற்கொண்டு அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை கிராம முக்கியஸ்தர், இளைஞர் செய்திருந்தனர்.