ரூ. 80 லட்சம் நிலம் ரூ.18 லட்சத்துக்கு அபகரிப்பு போராட்டம்.
மயிலாடுதுறை அடுத்துள்ள மாப்படுகை கடை வீதியில் ரூ. 80 லட்சம் பெருமான இடத்தை ரூ.18 லட்சம் கடன் கொடுப்பதாக கூறி மோசடி செய்து அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி உண்ணாவிரதம்;
மயிலாடுதுறையை அடுத்துள்ள மாப்படுகை கடை வீதியில் கடை மற்றும் வீடுகளை வைத்திருப்பவர் ராஜலட்சுமி(65). வங்கி மற்றும் இவரது மகன் வாங்கிய கடனை அடைக்க புரோக்கர் சுரேஷ் மூலம் .மாதம்ரூ.40 ஆயிரம் வட்டி என்று ரூ. 18லட்சத்திற்கு பணம் பெற்றுள்ளார். இந்த கடனுக்கு புரோக்கர் சுரேஷ் கடன் பத்திரம் பதிவு என அழைத்துச் சென்று பத்திர பதிவு அலுவலகத்தில் தனது பெயரில் பவர் பத்திரம் எழுதிக் கொண்டார். ஒரு வாரத்திற்குள் அந்த வீட்டை வேறு நபருக்கு விற்று விட்டார். இரண்டு மாதம் கடந்த நிலையில் தம் ஏமாற்றப்பட்டதை அறிந்த ராஜலட்சுமி மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இதற்கிடையே வீட்டை அபகரிப்பதில் ராஜலட்சுமி குடும்பத்தினருக்கும் சுரேஷ் தரப்பினருக்கும் அடிதடி தகராறு ஏற்பட்டு அதில் ராஜலட்சுமி மகன் பாலமுருகன் சிறையில்அடைக்கப் பட்டார். நில அபகரிப்பு வழக்கு பதிவு செய்தும் தன்னை ஏமாற்றிய நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி ராஜலட்சுமி மற்றும் நாடார் மக்கள் பேரவையினரும் ராஜலஷ்மி வீடு முன்பாக அமர்ந்துதொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மயிலாடுதுறை போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.