சங்கரன்கோவிலில் கிறிஸ்துமஸ்க்கு 80000 கேக்குகள் வழங்கல் MLA ராஜா
கிறிஸ்துமஸ்க்கு 80000 கேக்குகள் வழங்கல் MLA ராஜா
உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நேற்று முன்தினம் இரவு முதலே கிறிஸ்தவர்கள் பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்நிலையில், தென்காசி வடக்கு மாவட்டம் திமுக செயலாளரும் மற்றும் சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா சங்கரன்கோவிலில் உள்ள புனித சூசையப்பர் தேவாலயத்தில் நடந்த பிரார்த்தனையில் கலந்து கொண்டு கூறுகையில், தொகுதியில் உள்ள 218 தேவாலயங்களில் 80 ஆயிரம் கேக்குகள் வழங்கப்பட்டதாக சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உள்ளிட்ட கலர் கலந்து கொண்டனர்.