கூட்டுறவு துறை மூலம் கடந்தாண்டு மட்டும் 833 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.

கூட்டுறவு துறை மூலம் கடந்தாண்டு மட்டும் 833 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் தங்கவேல் விளக்கம்.

Update: 2024-08-16 11:04 GMT
கூட்டுறவு துறை மூலம் கடந்தாண்டு மட்டும் 833 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆட்சியர் தங்கவேல் விளக்கம். கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எல்லமேடு பகுதியில், கரூர் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க கிளை திறப்பு விழா மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் இளங்கோ, கூட்டுறவு சங்க இணை பதிவாளர் கந்தராஜா, உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க அலுவலர்கள், உறுப்பினர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். மாவட்ட ஆட்சியர் தங்கவேல், பின்னர் அங்கே கூடியிருந்த பொது மக்களிடையே பேசும் போது, கிராம பகுதியில் விவசாயிகளுக்கான கடன் வழங்கும் முன்னணி சங்கமாக கூட்டுறவு கடன் வழங்கும் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த சங்கங்கள் கிராமத்தின் வளர்ச்சிக்கு பேருதவியாக உள்ளது எனவும், விவசாயத்துக்கு மட்டுமின்றி பல்வேறு சமுதாயத்திற்கும் பலன் உள்ள வகையில் பல்வேறு கடன்கள் கூட்டுறவு துறை மூலம் வழங்கப்பட்டு வருவதாகவும், கடந்த ஆண்டு மட்டும் 833 கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளது எனவும், கடன் வாங்கும் பயனாளிகள் கடனை திருப்பி செலுத்துவதன் மூலம் கடன் வழங்கும் கூட்டுறவு துறை எழுச்சி பெறும் எனவும், அதன் மூலம் கிடைக்கக்கூடிய லாபங்கள் திரும்ப சங்க உறுப்பினர்களுக்கு கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

Similar News