காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 87 ஆவது கலந்துரையாடல் நடைபெற்றது
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சியின் 87 ஆவது கலந்துரையாடல் நடைபெற்றது
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ராஜபாளையம் ரமணா சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் பயிலும் 40 பள்ளி மாணவ, மாணவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாகவும், அவர்களின் திறமைகளை பாராட்டும் விதமாகவும் நடைபெற்ற Coffee With Collector” என்ற 87-வது கலந்துரையாடல் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவ ஜெயசீலன் மாணவ மாணவிகளிடம் கலந்துரையாடினார். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் உள்ள அரசு/அரசு உதவிபெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளில் கல்வி, பொதுஅறிவு, விளையாட்டு, ஓவியம், இசை உள்ளிட்ட பல்வேறு திறன் அடிப்படையில் மாணாக்கர்களின் திறன்களை கண்டறிந்து, ஒவ்வொரு ஒன்றியத்திற்கும் மாணவ, மாணவியர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு பிரதி வாரம் ஒருமுறை அவர்களை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் அழைத்து கலந்துரையாடும் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு, இன்று 87-வது முறையாக பள்ளி மாணவ, மாணவியர்களிடம் கலந்துரையாடல் நிகழ்;ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கம், மாணவர்களுடைய உயர்ந்த இலட்சியம், அவர்களுடைய உயர்கல்வி பயில்வதற்கு வழிகாட்டுதல், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளுதல், தோல்வியை எவ்வாறு எதிர்கொள்வது,அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் அவர்களுடைய சந்தேகங்களை அகற்றி, அவர்கள் வாழ்க்கையில் எங்கு பிறந்தோம், நாம் அரசு பள்ளியில் பயின்றோம், நமக்கு வசதி இல்லை, நமக்கு பின்புலம் இல்லை என்ற பல்வேறு காரணங்கள் வாழ்க்கையில் ஒரு உயர்ந்த இடத்தை அடைவதற்கு இந்த காரணங்கள் ஒரு தடை இல்லை என்பதை புரிய வைத்து, தன்னம்பிக்கை, விடாமுயற்சி, கடின உழைப்புடன் தொடர்ந்து உழைத்தால் நாம் எதையும் சாதிக்க முடியும் என்பதை உணர்த்தும் வகையில் சரியான வழிகாட்டுதல் வழங்குவதே இந்த நிகழ்ச்சியின் முக்கிய நோக்கமாகும். இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பள்ளி மாணவ, மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் அவர்களுடைய லட்சியம், அவர்களுக்கு எந்த துறையில் ஆர்வம், அவர்களுக்கு பிடித்த விளையாட்டு, வீரர்கள், அவர்களுடைய பொழுதுபோக்கு உள்ளிட்டவை குறித்து கேட்டறிந்தார். மாணவர்களும் தங்களுக்கு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ், மருத்துவம், வழக்கறிஞர், தொழிலதிபர், விளையாட்டு வீரர், இசையமைப்பாளர் உள்ளிட்;ட பல்வேறு துறைகளில் படிப்பதற்கு விருப்பம் இருப்பதாக தெரிவித்தனர். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பேசும் பொழுது, இப்பொழுது உள்ள சூழ்நிலையில் உங்கள் பெற்றோர்களை காட்டிலும் உங்களுக்கு வாழ்க்கையில் படிப்பதற்கும், உங்கள் இலக்கு, ஆசை, இலட்சியத்தை அடைவதற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் என்றும், உங்கள் இலட்சியத்தை அடைவதற்கு உங்களுடைய பின்புலமோ, ஏழையா, வசதி படைத்தவரா,நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள் என்பது முக்கியமில்லை, நீங்கள் எங்கு போய் சேர்கீர்கள், உங்கள் இலட்சியத்தை எவ்வாறு அடைகிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் வாழ்க்கை உங்கள் கையில். எனவே, வாழ்க்கையில் தன்னம்பிக்கை மற்றும் தைரியத்துடன் கடினமாக உழைத்தால் வாழ்வில் எதை வேண்டுமானாலும் சாதிக்கலாம். வாழ்க்கையில் தோல்வி என்ற ஒன்றை சந்திக்காமல் சாதித்த மனிதரே இங்கே யாரும் இருக்க முடியாது. எனவே வாழ்வில் தோல்வியோ, கஷ்டமோ வரும் போது அதிலிருந்து எப்படி மீண்டு வருவது என்பதை சிந்தித்து செயல்பட வேண்டும். எல்லோருக்கும் ஒரு தனித்திறனை இருக்கும். அந்த திறமையை கண்டறிந்து தங்களை மெருகேற்றி கொள்ள வேண்டும். உங்கள் வாழ்க்கையில் உங்களால் முடியாது, சாதிக்க முடியாது என்று யார் என்ன சொன்னாலும், நீங்கள் அதை நம்பி விடாமல், உங்கள் இலக்கை நோக்கி சென்று கொண்டே இருக்க வேண்டும். மேலும், நீங்கள் உங்களுக்கென்று தனித்திறமைகளை வளர்த்து கொள்ள வேண்டும். நிறைய திறமைகள் உதாரணமாக, எழுத்து, வாசிப்பு, பேச்சு திறமை, தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட உங்களுக்கு விருப்பமான மொழிகளை தேர்ந்தெடுத்து அதில் புலமை பெற வேண்டும். வாழ்க்கையில் தொடர்ந்து நீங்கள் உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்றும், இது உங்களை முழுமைபடுத்தும் என்றும், இந்த திறமைகளை கொண்டு பல நபர்களுக்கு உதவ முடியும் என்றும் கூறினார். இதைவிட மிக முக்கியாமானது, நீங்கள் நன்றாக படித்து, ஒரு நல்ல நிலைக்கு வந்த பிறகு, எப்பொழுதும் உங்கள் நண்பர்கள், குடும்ப உறுப்பினர்களுடன் மகிழ்ச்சியாக இருக்க கற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் மகிழ்ச்சியாக இருந்து, உங்களை சுற்றி உள்ளவர்களையும் மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும். இது உங்களுடைய வேலையில் நன்றாக பார்பதற்கும், முன்னேற்வதற்கும் உதவியாக இருக்கும். அடுத்து வாழ்க்கையில் உங்களால் முடிந்த அளவு மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்றும் தெரிவித்தார். மேலும், மாணவர்கள் இந்திய குடிமையியல் பணி, இந்திய காவல் பணி, மருத்துவ பணி, இராணுவபணி உள்ளிட்ட பல்வேறு அரசு பணிகளில் சாதிப்பதற்கு பல்வேறு அறிவுரை மற்றும் ஆலோசனைகளை வழங்கினார். இறுதியாக மாணவர்கள் அனைவரும் அவர்களுடைய இலட்சியத்தை அடைவதற்கு வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார். 12-ஆம்; வகுப்பு பள்ளி படிப்பை முடித்தவுடன் கல்லூரி படிப்பில் சேருவதற்காக அனைத்து கல்லூரிகளிலும் தவறாமல் விண்ணப்பம் செய்ய வேண்டும். கடந்தாண்டு எந்த கல்லூரியில் எவ்வளவு கட் ஆப் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடைபெற்றது போன்ற தகவல்களை தெரிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருவரும் தங்களது தனித் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். 12-ஆம்; வகுப்பில் எடுக்க கூடிய மதிப்பெண்களை பயன்படுத்தி நமக்கான நல்ல வாய்ப்புகளை உருவாக்கி கொள்ள வேண்டும். உயர்கல்வி எங்கு பயின்றாலும், இந்தியாவில் சிறந்த கல்லூரியை தேர்ந்தெடுத்து படிக்க வேண்டும். வெற்றிக்கு தேவையான விஷயங்களை தொடர்ந்து ஆர்வத்துடன், கவனசிதறல் இல்லாமல், தொடர்ந்து விடா முயற்சியுடனும், கடினமாக உழைத்தால் எளிதாக வெற்றி பெறலாம். கல்லூரி படிப்பில் சேர்வதற்கு விருப்பத்தின் அடிப்படையில் மட்டும் முடிவு எடுத்தல் கூடாது. அனைவருக்கும் இலட்சியம் உண்டு. இலட்சியத்தை அடைவதற்கு தொடர்ந்து விடா முயற்சி செய்ய வேண்டும். நிலையான தொடர்ச்சியான சிறிய முயற்சிகள் பெரிய மாற்றங்களை ஏற்படுத்துகிறது. மேலும், ஒவ்வொருவருக்கும் என்று தனித்திறமைகள் உள்ளன. அத்திறமைகளை அனைவரும் வளர்த்து கொண்டு வாழ்வில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீல ன் தெரிவித்தார். நிறைவாக, மாணவ, மாணவிகள் கல்வி, வேலைவாய்ப்பு, தொழில் உள்ளிட்ட பல்வேறு துறைகள் தொடர்பான தங்களது சந்தேகங்களை மாவட்ட ஆட்சியரிடம் கேட்டு தெளிவு படுத்திக்கொண்டனர். இந்த சந்திப்பில் மாணவ, மாணவியர்கள்; உற்சாகத்துடன் கலந்து கொண்டு, இந்த நிகழ்ச்சி மூலம் எங்களுக்கு ஒரு புத்துணர்வு, ஊக்கம் அளிப்பதாகவும், மாவட்ட ஆட்சியர் போன்று தாங்களும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகி உள்ளதாகவும், எங்களுடைய கேள்விகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாவட்ட ஆட்சியர் தெளிவான விடை கொடுத்ததாகவும், நாங்களும் மாவட்ட ஆட்சியர் போன்று சாதித்து காட்டுவோம் என்றும், இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களுக்கு மாணவர்கள் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொண்டனர்.