கடலில் மூழ்கி விசைப்படகு 9 மீனவர்கள் மீட்பு
தூத்துக்குடி அருகே நடுக்கடலில் விசைப்படகு மூழ்கியது ஒன்பது மீனவர்கள் பத்திரமாக மீட்பு;
தூத்துக்குடி விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து இன்று அதிகாலை மீன்பிடிக்க சென்ற விசைப்படகில் நடுக்கடலில் வைத்து படகில் ஓட்டை விழுந்ததால் படகிற்குள் தண்ணீர் புகுந்ததை தொடர்ந்து படகில் இருந்த ஒன்பது மீனவர்களை சக மீனவர்கள் பத்திரமாக மீட்டனர் கடலில் தண்ணீர் புகுந்து மூழ்கும் படகை மீனவர்கள் மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர் ரூபாய் 70 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் தூத்துக்குடி மீன் பிடி துறைமுகத்தில் இருந்து கலைராஜன் என்பவருக்கு சொந்தமான விசை படகில் ஓட்டுநர் ஆண்டோ மற்றும் ராஜ் உட்பட 9 நபர்களுடன் மீன்பிடிக்க இன்று விசைப்படகு மீன்பிடி துறைமுகத்திலிருந்து அதிகாலை கிளம்பியுள்ளது. திடீரென கடற் பகுதியில் அதிகமான காற்று வீசியதன் காரணமாக படகில் ஏற்பட்ட பழுது காரணமாக மீன்பிடி படகுக்கு உள்ளே நடுக்கடல் பகுதியில் வைத்து தண்ணீர் புக ஆரம்பித்துள்ளது இதனை கவனித்த ஓட்டுநர் ஆண்டோ படகை கரையை நோக்கி வேகமாக செலுத்தியுள்ளார். இந்த நிலையில் காற்றின் வேகத்தாலும் படகுக்கு உள்ளே புகுந்த தண்ணீராலும் படகு கரைக்கு வரும் வழியில் முயல் தீவிற்கு கிழக்கே தண்ணீரில் மூழ்க ஆரம்பித்தது. இதைத்தொடர்ந்து படகை மேடான பகுதிக்கு பாதுகாப்பாக கொண்டு சென்று நிறுத்தியுள்ளனர் உடனடியாக தங்களது கையில் வைத்திருந்த கைபேசி மூலம் அருகாமையில் இருந்த மீன்பிடி படகுகளுக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த மீன்பிடி படகுகள் மற்றும் கரையிலிருந்து சென்ற பைபர் படகில் சென்றவர்கள் அனைவரும் சேர்ந்து மீன்பிடி படகில் இருந்த ஒன்பது பேரையும் பத்திரமாக மீட்டனர். மீன்பிடி படகு முற்றிலும் தண்ணீரில் மூழ்கியதால் மீன்பிடி படகு மற்றும் வலை ஜிபிஎஸ் கருவிகள் மீன்பிடி உபகரணங்கள் என 60 முதல் 70 லட்ச ரூபாய் வரையிலான பொருட்கள் தண்ணீரில் மூழ்கியுள்ளதாக மீனவர்கள் கூறுகின்றனர். தற்போது தண்ணீரில் மூழ்கிய மீன்பிடி படகை மீட்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்