கோவை ரயில்நிலையத்தில் 9 கிலோ கஞ்சா பறிமுதல்!

பொதுப் பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று இருந்த வெள்ளை பையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.;

Update: 2025-07-21 06:11 GMT
கோவை ரயில்நிலையத்தில் நிற்கும் வெஸ்ட் கோஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயிலில் நடத்தப்பட்ட சோதனையின் போது, பொதுப் பயணிகள் பெட்டியில் கேட்பாரற்று இருந்த வெள்ளை பையில் 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வெளி மாநிலங்கள் மற்றும் ஊர்களில் இருந்து போதைப்பொருள் கடத்தல் அதிகரித்து வரும் நிலையில், ரயில்வே காவல்துறையினரும் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இணைந்து தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர். கஞ்சா பறிமுதல் தொடர்பாக, குறித்த பை யாரால் வைக்கப்பட்டது, எங்கிருந்து கடத்தப்பட்டது என்பது தொடர்பாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

Similar News