இந்தியாவில் முதல்முறையாக நுரையீரல் புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடிக்கும் AI எக்ஸ்ரே.

நாமக்கல் தங்கம் மருத்துவமனை மற்றும் மாவட்ட காவல் துறை இணைந்து AI Digital X-ray மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கான சிறப்பு இலவச முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்றது.;

Update: 2025-11-29 14:25 GMT

இந்நிகழ்ச்சியில் தங்கம் மருத்துவமனை நிர்வாக இயக்குனர் மருத்துவர் குழந்தைவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விமலா தலைமை வகித்து முகாமினை தொடங்கி வைத்தார்.நாமக்கல் தங்கம் புற்றுநோய் சிகிச்சை மையம் அறிமுகம்மருத்துவமனையில் இந்தியாவிலேயே முதன் முறையாக ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ட் நுரையீரல் புற்றுநோயை தொடக்கத்திலேயே கண்டறியும் முறையில் எக்ஸ்ரே கருவியை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த ஆர்ட்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ் நுரையீரல் புற்றுநோயை கண்டுபிடிக்கும் எக்ஸ்ரேவை நடமாடும் உறுதியில் கொண்டு சென்று அவரவர் வீட்டின் அருகே முகாம் அமைத்து இலவசமாக இம்முறையை பொதுமக்கள் அனைவரும் பயன்படுத்திக் கொள்ளவும் அமைக்கப்பட்டுள்ளதுஇந்நிகழ்ச்சியில் காவல்துறையினர் பெருமளவில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Similar News