கோவை: Getoutravi போஸ்டரால் பரபரப்பு !
தமிழக ஆளுநரை கண்டித்து திமுக சார்பில் கோவை முழுவதும் போஸ்டர்.
நேற்றைய தினம், சட்டசபையை ஆளுநர் ரவி அவமதித்ததாக கூறி, கோவை முழுவதும் திமுகவினர் போஸ்டர் ஒட்டி உள்ளனர். சட்டசபைக்குள் சென்று ஆளுநர் கூட்டம் தொடங்குவதற்கு முன் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என கூறியிருந்த நிலையில், ஆனால் அங்கு தேசிய கீதம் இசைக்கப்படாமல் இருந்ததால் ஆளுநர் சட்டசபையை விட்டு கூட்டம் தொடங்குவதற்கு முன்பே வெளியேறிவிட்டார்.ஆளுநரின் இந்த செயலை கண்டித்து தமிழக முழுவதும் திமுகவினர் இன்று போராட்டம் நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர். இன்னலையில் கோவை மாநகர் முழுவதும் ஆட்டுக்குட்டிக்கு தாடி எதற்கு ?நாட்டுக்கு கவர்னர் எதற்கு ? என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை கேள்விகளாக தொடுத்து # Get Out Ravi என்ற வாசகத்தின் மூலம் எதிர்ப்பை பதிவு செய்து போஸ்டர் ஒட்டி உள்ளனர். கோவையில் இது பரபரப்பை கிளப்பி உள்ளது.