ஸ்ரீபெரும்புதூரில் குட்கா விற்ற மூவர் கைது
ஸ்ரீபெரும்புதூர் அருகே குட்காவிட்ட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுார் அருகே நெமிலி கிராமம், பஜனை கோவில் தெருவில் உள்ள பெட்டி கடையில், ஸ்ரீபெரும்புதுார் போலீசார் நேற்று முன்தினம் சோதனையில் ஈடுபட்டனர்.அதில், காந்தம்மாள், 62, என்பவருக்கு சொந்தமான கடையில், அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனைக்காக வைத்திருந்து தெரிந்தது. இதையடுத்து, 1.5 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்து, காந்தம்மாளை கைது செய்து சிறையில் அடைத்தனர். அதேபோல், சுங்குவார்சத்திரம் அடுத்த செல்விழிமங்கலம் கிராமத்தில் உள்ள கடையில், குட்கா விற்ற சரவணன், 40, மேல்மதுரமங்கலம் கிராமம், பெருமாள் கோவில் தெருவில் உள்ள டீக்கடையில் குட்கா விற்ற கேசவன், 47, ஆகிய இருவரை சுங்குவார்சத்திரம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.