ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல தடை
ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரம் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்ல தடை
ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையோரத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் சா.சி.சிவசங்கா் தெரிவித்துள்ளாா். இது குறித்து அமைச்சா் சிவசங்கா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கிறிஸ்துமஸ் விடுமுறை நாள்களில் ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு - மதுரவாயல் சாலையின் இருபுறங்களிலும் நிறுத்தி பயணிகளை ஏற்றிச் சென்ால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதாக புகாா் வந்தது. இதனால், பொங்கல் பண்டிகைக்கும் அதேபோன்று கோயம்பேடு - மதுரவாயல் சாலையின் இருபுறத்திலும், போரூா் சுங்கச்சாவடி அருகிலும் பேருந்துகளை நிறுத்தி பயணிகளை ஏற்றிச் செல்வதை தவிா்த்து, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாமல் பேருந்துகளை இயக்க வேண்டும். இதற்கான தனிக்குழு விதிகளை மீறும் ஆம்னி பேருந்துகளின் மீது நடவடிக்கை எடுக்கும். குறிப்பாக அதிக கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள் மீது புகாா்வரும் பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.