மோகனூரில் தூய்மையே சேவை மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணி! -K.R.N.இராஜேஸ்குமார் MP பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள், குடியிருப்பு பகுதிகள், பொது போக்குவரத்து மையங்கள், முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.

Update: 2024-09-20 15:39 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மோகனூரில் ஊரக வளர்ச்சி துறை ஏற்பாட்டில், தூய்மையே சேவை - 2024 இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்த சுகாதார விழிப்புணர்வு பேரணியை, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா, பாராளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் / நாமக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் K.R.N.இராஜேஸ்குமார் MP ஆகியோர் மோகனூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் இருந்து தொடங்கி வைத்தனர். முன்னதாக, தூய்மையே சேவை சுகாதார விழிப்புணர்வு உறுதிமொழியினை, மாவட்ட ஆட்சியர் வாசிக்க அனைவரும் அதனைத் தொடர்ந்து வாசித்து ஏற்றுக்கொண்டனர். இந்த பேரணியானது மோகனூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்றது. அப்போது தூய்மை அவசியம் குறித்து விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி கொண்டு, கோஷங்களை முழங்கியவாறு சென்றனர்.தூய்மையே சேவை 2024 இயக்கம், இம்மாதம் 17-ம் தேதி முதல் அக்டோபர் 2-ம் தேதி வரைவரை நடைபெற்று வருகிறது. இவ்வியக்கத்தின்போது, பொதுமக்கள் பங்கேற்புடன் தூய்மைப்படுத்துதல் மற்றும் உறுதிமொழி எடுத்தல், பொதுமக்களிடையே சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துதல், மகளிர் சுய உதவிக் குழுக்கள் ஈடுபாட்டுடன் வீடுகள் மற்றும் கடைகள் தோறும் திட - திரவக் கழிவு மேலாண்மை தொடர்பான விழிப்புணர்வு மேற்கொள்ளுதல், தூய்மை பாரத இயக்க கட்டமைப்புகளை புதுப்பித்தல், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், தூய்மை பணியாளர்களுக்கு மருத்துவ முகாம் மூலம் மருத்துவ பரிசோதனை நடத்துதல், பள்ளிகளில் சுகாதாரம் தொடர்பான போட்டிகள் நடத்துதல், கிராம சபா நடத்துதல், தூய்மை காவலர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் சுகாதார ஊக்குநர்களை கௌரவித்தல், மற்றும் இவ்வியக்கத்தில் சிறப்பாக பணியாற்றிய ஊராட்சிகளுக்கு பரிசளித்தல், போன்ற நிகழ்ச்சிகள் யாவும் அனைத்து கிராம ஊராட்சிகளிலும் நடைபெற உள்ளன. இதன் தொடர்ச்சியாக, நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 ஊராட்சிகள், குடியிருப்பு பகுதிகள், பொது போக்குவரத்து மையங்கள், முக்கிய சாலைகள், நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகள் தூய்மைப்படுத்தும் பணிகள் நடைபெற உள்ளன.இந்நிகழ்ச்சியில், நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் இராமலிங்கம் எம்எல்ஏ, நாமக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சு. வடிவேல், ஊரக வளர்ச்சி துறை பணியாளர்கள் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

Similar News