நாமக்கல் வருகை தரும் தமிழக முதலமைச்சருக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிக்க வேண்டும்!- K.R.N.ராஜேஸ்குமார் MP வேண்டுகோள்..

முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும் தமிழக முதலமைச்சருக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிக்க வேண்டும்! -K.R.N.ராஜேஸ்குமார் MP

Update: 2024-10-18 13:17 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம் நாமக்கல் மோகனூர் ரோட்டில் உள்ள, மாவட்ட திமுக அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட திமுக அவைத்தலைவர் மணிமாறன் நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். நாமக்கல் சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்கம் எம்எல்ஏ சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி எம்எல்ஏ ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட திமுக செயலாளர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகையில்.....
வருகின்ற 22ம் தேதி நாமக்கல் நகருக்கு வருகை தந்து, நாமக்கல் - பரமத்தி சாலையில் உள்ள செலம்பகவுண்டர் பூங்கா பகுதியில் அமைக்கப்பட்டுள்ள, மறைந்த முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு விழா மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்கும், தமிழக முதலமைச்சருக்கு வரலாறு காணாத வகையில் வரவேற்பு அளிப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.
மேலும், நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட நாமக்கல் சட்டசபை தொகுதியில், சட்டசபை தேர்தலுக்கான, பூத் கமிட்டி அமைத்தல், வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல், புதிய வாக்காளர் சேர்த்தல், நீக்கல் உள்ளிட்ட தேர்தல் பணிகளை மேற்பார்வையிடுவதற்காக, தலைமை கழகம் மூலம், மாநில சிறுபான்மையினர் நல உரிமைப்பிரிவு செயலாளர் ஜான் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சேந்தமங்கலம் சட்டசபை தொகுதிக்கு மாநில மகளிர் தொண்டரணி இணை செயலாளர் ரேகா பிரியதர்ஷினி, ராசிபுரம் சட்டசபை தொகுதிக்கு மாநில நெசவாளர் அணி செயலாளர் நன்னியூர் ராஜேந்திரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கூட்டத்தில் மாநில தொகுதி பார்வையாளர்கள் அறிமுகம் செய்யப்பட்டனர்.நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக அலுவலகம் அமைப்பதற்காக இடத்தை தேர்வு செய்யவும், அதில் புதிய கட்டிடம் கட்டவும், கமிட்டி அமைத்து பணிகளை மேற்கொள்வதென்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் நாமக்கல் மாநகர மேயர் து. கலாநிதி, துணை மேயர் பூபதி, முன்னாள் எம்எல்ஏ ராமசுவாமி, மாநில திமுக நிர்வாகிகள் நக்கீரன், ராணி மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, டவுன் பஞ்சாயத்து நிர்வாகிகள், சார்பு அணியினர் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Similar News