ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் கோவில் பண்டிகை முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது..

Update: 2024-10-18 14:38 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் உள்ளது. இக்கோவிலில் ஒவ்வொரு முக்கிய விசேஷ தினங்களில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் அபிஷேகங்கள் நடைபெறும். ஐப்பசி மாதத்தில் ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் திருக்கோவில் பண்டிகை விமர்சையாக நடைபெறுவதும் வழக்கம். அதன்படி இந்த ஆண்டு கோவில் திருவிழா வருகின்ற 22 ஐப்பசி 5ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பூச்சாட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். அதனை முன்னிட்டு தற்போது ஐப்பசி ஒன்றாம் தேதி திருவிழாவிற்கு முகூர்த்த கால் நடும் நிகழ்வு கோவிலில் சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக ஸ்ரீ நித்திய சுமங்கலி மாரியம்மன் க்கு பல்வேறு அபிஷேகங்கள் ஆராதனைகள் நடைபெற்று அதன் பின்னர் வெள்ளி காப்பு மலர் அலங்காரம் செய்து மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கோவிலை முகூர்த்தக்கால் சுற்றி வந்து கோவில் முன்பு சிறப்பு பூஜைகள் செய்து பூசாரிகள், பக்தர்கள் என அனைவரும் கலந்து கொண்டு முகூர்த்தக்கால் நடும் விழாவை சிறப்பாக செய்தனர். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டது.

Similar News