அம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- MP ஜோதிமணி கரூரில் பேட்டி.

அம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- MP ஜோதிமணி கரூரில் பேட்டி.

Update: 2024-12-25 05:35 GMT
அம்பேத்கரை இழிவாக பேசிய அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்- MP ஜோதிமணி கரூரில் பேட்டி. அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்துக்கு எதிராக பாஜக ஆட்சி நடத்துகிறது. அம்பேத்கர் இழிவாக பேசிய அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், பதவி விலக வேண்டும் என குடியரசுத் தலைவருக்கு காங்கிரஸ் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளதாக எம்.பி ஜோதிமணி கரூரில் பேட்டி. கரூரில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார் கரூர் எம்பி ஜோதிமணி. அப்போது, அமித்ஷா நாடாளுமன்றத்தில் அம்பேத்கர் பற்றி இழிவாக பேசியுள்ளார். இதனால் நாடெங்கும் கொந்தளிப்பை ஏற்பட்டுத்தி உள்ளது. நேருவை நேரடியாகயும், அம்பேத்கரை மறைமுகமாக விமர்சனம் செய்கின்றனர். நேரடியாக நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை இழிவுபடுத்தி அமித்ஷா பேசி உள்ளார். அம்பேத்கர் வகுத்த அரசியல் சாசனத்திற்கு எதிராக பாஜகவினர் ஆட்சி நடத்தி வருகின்றனர். மனுநீதிக்கு ஆதரவான ஆர்.எஸ்.எஸ் மனப்பான்மையை பாஜகவினர் ஆதரித்து வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அம்பேத்கரை மட்டும் அமித்ஷா இழிவு படுத்தவில்லை. ஒடுக்கப்பட்ட சமூகம் மற்றும் பெண்களை இழிவுபடுத்தி உள்ளார். அம்பேத்கர் மற்றும் அரசியல் சாசனத்தை இந்த மக்கள் தங்கள் இதயத்தில் வைத்துள்ளனர். அம்பேத்கரை அவமரியாதையாக பேசிய அமித்ஷா பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும், பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். இது சம்பந்தமாக குடியரசு தலைவருக்கு, காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை கடிதம், மாவட்ட ஆட்சியர்கள் மூலம் அனுப்பப்பட்டு வருகிறது. ஒடுக்கப்பட்ட சமுதாயத்திற்கு எதிராக பாஜக அரசு ஆட்சி நடத்தி வருகிறது என்றார்.

Similar News