சேந்தமங்கலம்: அருள்மிகு கிருஷ்ணசாமி கோவில் கும்பாபிஷேகம் M.P மற்றும் M.L.A பங்கேற்பு.
தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலைத்துறை சார்பில் நாமக்கல்லில் சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிருஷ்ணசாமி என்கின்ற வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் இன்று கும்பாபிஷேகம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
நாமக்கல்லில் சேந்தமங்கலத்தில் அமைந்துள்ள அருள்மிகு கிருஷ்ணசாமி என்கின்ற வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில் இன்று திருக்குட நன்னீராட்டு பெருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது இதில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கும்பாபிஷேகத்தை சிறப்பித்தனர் இந்நிகழ்வானது மங்களகரமான திருவள்ளுவர் ஆண்டு 2055 குரோதி வருடம் ஐப்பசி திங்கள் 22 ஆம் நாள் இன்று வெள்ளிக்கிழமை சப்தமி திதி உத்திராடம் நட்சத்திரம் கூடிய சுபயோக சுபதினத்தில் இன்று காலை 8 மணி முதல் 9:00 மணிக்குள் விருச்சிக லக்னத்தில் அருள்மிகு கிருஷ்ணசாமி என்கின்ற வெங்கட்ரமன சுவாமி திருக்குட நன்னீராட்டு பெருவிழா அருள்மிகு கிருஷ்ணரின் திருவருளால் ஸ்ரீ வைகானஸ ஆகும் முறைப்படி சிறப்புடன் நடைபெற்றது. திருக்குட நன்னீராட்டு விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அருள்மிகு கிருஷ்ணசாமி என்கின்ற வெங்கட்ரமண சுவாமியை தரிசித்து அருள் பெற்றனர். இந்நிகழ்வில் சேந்தமங்கலம் எம் எல்.ஏ பொன்னுசாமி மற்றும் எம்.பி. மாதேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டு அருள்மிகு கிருஷ்ணசாமி என்கின்ற வெங்கட்ரமண சுவாமியை சிறப்பு தரிசனம் செய்து வழிபட்டனர்.