வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து SDPI ஆர்ப்பாட்டம்
வக்பு வாரிய சட்டத்தை தாக்கல் செய்வதை கண்டித்து திருச்சி எஸ்டிபிஐ கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்;
வக்பு வாரிய சட்டத்தை கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு இஸ்லாமிய அமைப்பினர் தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி பாலக்கரை ரவுண்டானா பகுதியில் எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் மத்திய அரசு கண்டித்து வக்பு வாரிய சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், பள்ளிவாசல், மதரஸா, கபர்ஸ்தான் ஆகியவை விட்டு தரமாட்டோம் என வலியுறுத்தியும் மாவட்ட தலைவர் தமீம்ஆன்சாரி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது வக்பு வாரிய சட்டத்த உடனடியாக திரும்ப பெற வேண்டும் வலியுறுத்தி மாவட்ட பொதுசெயலாளர் பொறியாளர் முகமது சித்தீக், சதாம், மஜீத், பிச்சைகனி, சபியுல்லா, ரியாஸ், பெண்கள் அமைப்மை சேர்ந்த தவுலத்நிஷா மற்றும் மாவட்ட, நகர நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கோஷமிட்டனர்.