குமரி மாவட்டம் ஆறுகாணி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட வெள்ளெருக்குமலையில் உள்ள வனப் பகுதியில் அதே பகுதியை சேர்ந்த பாரப்பன் ( 55) என்பவர் சாராயம் காய்ச்சுவதாக மாவட்ட எஸ்பி ஸ்டாலினுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. எஸ்பி உத்தரவின் பேரில் போலீசார் நேற்று அந்தப் பகுதியில் பாரப்பன் வீட்டில் சென்று சோதனை இட்டனர். போலீஸ் வருவதை அறிந்த பாரப்பன் வீட்டில் இருந்து தப்பி ஓடி விட்டார். தொடர்ந்து போலீசார் சாராயம் கட்சிய இடத்தை போலீசார் கண்டுபிடித்து, பத்து லிட்டர் சாராய ஊழல் மற்றும் தயாரிக்க பயன்படுத்திய பொருட்களை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடியவரை தேடி வருகின்றனர்.