100 நாள் பணி வழங்காததை கண்டித்து பெண்கள் சாலை மறியல்

மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பு

Update: 2024-08-29 16:45 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி வழங்காததை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் போக்குவரத்து பாதிப்பு திருவள்ளூர் மாவட்டம், நெய்த வாயல் ஊராட்சியில் நெய்தவாயல் ஊராட்சியில் சுமார் 1500 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர் இங்கு பெரும்பான்மையான மக்கள் ஏழ்மை நிலையில் இருப்பதால் இவர்கள் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தின் 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றி வருகின்றனர். இந்த கிராமத்தில் இரு பகுதியாக உள்ள மக்களில் ஒரு பகுதியினருக்கு தொடர்ந்து 100 நாள் வேலை கொடுப்பதாகவும் பட்டியலினப் பொதுமக்களுக்கு தொடர்ந்து மூன்று வாரமாக 100 நாள் பணிபுறக்கணிக்கப்பட்டதாகவும் கூறி நெய்த வாயல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு தக்க நடவடிக்கை எடுக்க கேட்டுள்ளனர். ஊராட்சி மன்றத்தின் சார்பில் சரியான பதில் இல்லாத காரணத்தினால் பொதுமக்கள் பழவேற்காடு மீஞ்சூர் நெடுஞ்சாலையில் திடீர் சாலை மறியலில் அமர்ந்து தங்களது கோரிக்கை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகாரிகள் உடனடியாக இப்பகுதிக்கு வந்து தங்களுக்கு உடனடியாக 100 நாள் வேலை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்புக்குள்ளானது.

Similar News