100% வாக்களிக்க விழிப்புணர்வு துண்டு பிரசுரம் பேரணி

மயிலாடுதுறை அருகே நீடுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி பங்கேற்று 100 சதவீதம் தேர்தலில் பொதுமக்கள் வாக்களிக்க வழியுறுத்தி விழிப்புணர்வு பேரணியை துவங்கி வைத்தார்.

Update: 2024-03-23 11:10 GMT

விழிப்புணர்வு பேரணி

மயிலாடுதுறை மாவட்டம், நீடுர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் நடைபெற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியரும் மாவட்ட தேர்தல் அலுவலருமான ஏ.பி.மகாபாரதி கலந்து கொண்டார். மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வாக்காளர் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை மாவட்ட ஆட்சியர் வழங்கினார் தொடர்ந்து வாக்காளர் விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சியில் எதிர்வரும் தேர்தல் நாள் அன்று 100 சதவீதம் வாக்குப்பதிவு நடைபெற வேண்டும் என்ற அனைவரும் உறுதிமொழியேற்றனர்.

எனது ஓட்டு எனது உரிமை என்பதை குறிக்கும் வகையில் சுயப்படம் எடுத்துக்கொள்ளும் பதாகையில் நின்று மாவட்ட ஆட்சியர் மகாபாரதி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் பொதுமக்கள் பகைப்படம் எடுத்து கொண்டனர். தொடர்ந்து வாக்காளர் விழிப்பணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தொடங்கி வைத்தார். இப்பேரணியில் 100 மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் கலந்துக்கொண்டு வாக்களிப்பதன் அவசியம் கூறித்து பதாகைகள் ஏந்தி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத்தின் மண்டல இணைப்பதிவாளர் தயாள விநாயக அமுல்ராஜ், மகளிர் திட்டம் திட்ட அலுவலர் செந்தில்குமார் மற்றும் அரசு அலுவலர்கள், மகளிர்க்குழு உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.

Tags:    

Similar News