1008 தேங்காயில் அலங்காரம் பழனியாண்டவர்க்கு சிறப்பு பூஜை
சங்ககிரி அருகே பழமை ஆண்டவர் 1008 தேங்காயில் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.;
Update: 2024-01-25 15:20 GMT
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட கொட்டாயூர் பகுதியில் உள்ள பழனிஆண்டவர் கோவிலில் தைப்பூச விழாவையொட்டி பழனிஆண்டவர் சுவாமிக்கு 1008தேங்காய்களால் அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தைப்பூச விழாவையொட்டி பழனிஆண்டவர்க்கு பால் தயிர் சந்தனம் திருமஞ்சனம் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் விபூதி உள்ளிட்ட பல்வேறு திவ்ய திரவிய பொருட்களைக் சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்ற பின்னர் 1008தேங்காய்களை கொண்டு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.
இதில் கொட்டாயூர் கல்வடங்கம் மேட்டுப்பாளையம் நல்லங்கியூர் காவேரிபட்டி கோனேரிபட்டி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து திரளான மக்கள் கலந்து கொண்டு அரோரா கோஷம் எழுப்பி வழிபட்டனர் மேலும் மயில் காவடி எடுத்து ஆடினார் பின்னர் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.