வாலீஸ்வரர் திருக்கோயிலில் 1008 கிலோ அன்னாபிஷேகம்

வாலிகண்டபுரம் வாலீஸ்வரர் திருக்கோயிலில் 1008 கிலோ சாதத்தில் அன்னாபிஷேகம் நடைபெற்றது

Update: 2023-10-29 06:09 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் வாலிகண்டபுரத்தில் அமைந்துள்ளது வாலீஸ்வரர் திருக்கோயில். வானர அரசரான வாலி இவ்வூரில் உள்ள ஈசனை பூஜித்து வழிபட்டதால் இவ்வூர் வாலிகண்டபுரம் என்று அழைக்கப்படுகிறது. பிரசித்தி பெற்ற ஆயிரம் ஆண்டுகள் பழமை மையான இத்திருக்கோயில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இத்திருக்கோயில் மாவட்டத்தின் பெருமை மிகு அடையாளங்களில் ஒன்றாகும். இந்நிலையில் ஐப்பசி மாத பெளர்ணமியான இன்று இத்திருக்கோயிலில் வாலீஸ்வரருக்கு 1008 கிலோ  அரிசியால் சாதம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெற்றது.காய்கறிகளால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகளுக்கு மஹா தீபாரதனை நடைபெற்றது. அன்னாபிஷேக விழாவில் வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.
Tags:    

Similar News