104பி அரசுப் பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் - பாமக தீர்மானம்
Update: 2023-11-06 05:55 GMT
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தெள்ளார் மேற்குவடக்கு ஒன்றிய பாமக செயற்குழு கூட்டம் நேற்று தேசூர் மற்றும் மழையூர் பகுதியில் நடந்தது. கூட்டத்திற்கு மேற்கு ஒன்றிய செயலாளர் ஐயப்பன் தலைமை தாங்கினார். மாவட்ட கொள்கை பரப்பு செயலாளர் ஆசைத் தம்பி, ஒன்றிய பொருளா ளர் சந்தோஷ் குமார், ஒன்றிய குழு உறுப்பினர்கள் தசரதன், மணிகண்டன், ஒன்றியதலைவர் அன்பு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வடக்கு ஒன்றிய செயலாளர் சுப்பிரமணி வரவேற்றார். இதில் மாநில செயற்குழு உறுப்பினர் மன்னப்பன், மாவட்ட அமைப்பாளர் சக்திவேல், மாவட்ட தேர்தல் பணி குழு தலைவர் மணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அப்போது ஒன்றிய, புதிய நிர்வாகிகள் 90 பேருக்கு நியமன கடிதங்களை வழங்கினர். தொடர்ந்து, கூட்டத்தில் வரும் 8ம் தேதி செய்யாறில் நடைபெறும் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் கூட்டத்தில் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கலந்துகொள் வதால் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். கீழ்புத்தூர் வழியாக தேசூர் சென்ற 104பி அரசு பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும். என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.