வால்பாறையில் 3நாட்களாக பழுதடைந்து நிற்கும் 108 ஆம்புலன்ஸ்
வால்பாறை பகுதியில் 108 ஆம்புலன்ஸ் கடந்த மூன்று நாட்களாக பழுதாகி நடு சாலையில் நின்று உள்ளதால் பொதுமக்கள் அவதிக்குள்ளகி வருகின்றனர்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்துள்ள வால்பாறை சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் தேயிலை எஸ்டேட் தோட்டங்கள் உள்ளது இங்கு தொழிலாளர்கள் வனப்பகுதியை ஒட்டி உள்ள தேயிலை தோட்டத்தில் ஆபத்தான பகுதியில் வனவிலங்குகள் இடையே பணியாற்றி வருகின்றனர்.
தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் எதிர்பாராத விதமாக வனவிலங்குகள் தாக்கியோ அல்லது விபத்துக்குள்ளாகி ஆபத்தான சூழ்நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல தமிழக அரசின் 108 அவரசர ஊர்தியை பயன்படுத்தி வருகின்றனர்.. வால்பாறை சுற்றுவட்டர பகுதிகளில் மொத்தமாகவே நான்கு 108 ஆம்புலன்ஸ் இருந்த போதிலும் பற்றாக்குறியாக உள்ள நிலையில் முக்கிய இடங்களுக்கு செல்லும் இந்த 108 ஆம்புலன்ஸ் பெரிய கல்லார் பகுதிக்கு செல்லும் நடு வழியில் கடந்த மூன்று நாட்களாக பழுதாகி நிறுத்தப்பட்டுள்ளது..
இந்த ஆம்புலன்ஸ் பெரியகல்லார், சின்னக்கல்லார், வெள்ளமலை டாப், அக்கா மலை இஞ்சிபாறை மற்றும் வரட்டு பாறை ஆகிய இடங்களுக்கு செல்லக்கூடிய ஆம்புலன்ஸ் நிறுத்தப்பட்டுள்ளதால் அப்பகுதியில் உள்ள பொதுமக்களும் மற்றும் மலை கிராமத்தைச் சேர்ந்த மக்களும் ஆபத்தான நேரங்களில் மருத்துவ உதவிக்காக செல்ல முடியாதசூழல் ஏற்பட்டுள்ளது.
தற்போது வரும் மக்களவை தேர்தல் பரபரப்பான நிலையில் உள்ளதால் அரசுத்துறை அதிகாரிகளும் இதை கண்டு கொள்ளாததால் அப்பகுதி மக்கள் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர்.. எனவே உடனடியாக பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய அவசரகால 108 ஆம்புலன்சை பழுது நீக்கி பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டுமென அப்பகுதி சுற்றுவட்டார மக்களின் கோரிக்கையாக உள்ளது.