திருநெல்வேலி மாவட்டம் மானூரில் உள்ள அம்பலவான சுவாமி கோயிலில் 117 ஆண்டுகளுக்கு பின்னர் குடமுழுக்கு விழா நாளை வெகு விமரிசையாக நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு யாக பூஜைகள் நேற்று இரவு தொடங்கின. இன்று இரண்டாம் கால யாக பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை நடைபெறும் குடமுழுக்கு விழாவில் தமிழக இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் மக்கள் பிரதிநிதிகள் சான்றோர் பங்கேற்க உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.