தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் டி.பிரகாஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது, வருகிற ஆகஸ்ட் 12ஆம் தேதி செவ்வாய்க்கிழமை அன்று பேராவூரணி துணை மின் நிலையத்திலிருந்து மின்னூட்டம் செல்லும் கிராமங்களான, பேராவூரணி நகர், பழைய பேராவூரணி, செங்கமங்கலம், அம்மையாண்டி, ஆவணம், பைங்கால், சித்தாதிக்காடு, கொன்றைக்காடு, ஒட்டங்காடு, புனல்வாசல், துறவிக்காடு, கட்டையங்காடு, மதன்பட்டவூர், திருச்சிற்றம்பலம், செருவாவிடுதி, சித்துக்காடு, வாட்டாத்திகொல்லைக்காடு, ஆனைக்காடு, களத்தூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால், மின்தடை ஏற்படும் மேலும், பொதுமக்கள் மின்தடை புகார்களுக்கு மின்னகம் எண் 9498794987 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவித்துள்ளார்.