கன்னியாகுமரிக்கு 15 லட்சம் ஐயப்ப பக்தர்கள் வருகை
ஐயப்ப சீசன் காரணமாக தினம் சராசரியாக 25 ஆயிரம் ஐயப்ப பக்தர்கள் கன்னியாகுமரிக்கு வந்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கன்னியாகுமரிக்கு சபரி மலை சீசனில் இதுவரையும் 15 லட்சம் ஐயப்ப பக்தர்கள் வருகை தந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டல பூஜை கடந்த நவம்பர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. சபரிமலைக்கு செல்கின்ற பக்தர்கள் அங்கு சென்று விட்டு தினமும் ஆயிரக்கணக்கானவர்கள் கன்னியாகுமரிக்கும் வந்து செல்வது வழக்கம். இந்த வகையில் சபரிமலை சீசன் காலத்தில் கன்னியாகுமரிக்கு தினம் சராசரியாக 25 ஆயிரம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அந்த வகையில் இதுவரையிலும் மொத்தம் சுமார் 15 லட்சம் பக்தர்கள் வந்துள்ளனர். இதுபோக சுற்றுலா பயணிகளும் சபரிமலை சீசன் காலத்தில் மொத்தம் 5.36 லட்சம் பேர் வந்து சென்றள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது. தற்போது சபரிமலை சீசன் நிறைவடைந்துள்ள நிலையிலும் இன்று ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் காலை முதல் வெளி மாநிலம், வெளியூரை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் ஏராளம் பேர் வந்திருந்தனர். இதனால் வழக்கம்போல் கன்னியாகுமரி கடற்கரை களை கட்டியது.