16 கால் மண்டபம் அருகே மகனும், மருமகளும் பிரிந்து வாழ்வதால், விரக்தி அடைந்த முதியவர் மாயம்.
16 கால் மண்டபம் அருகே மகனும், மருமகளும் பிரிந்து வாழ்வதால், விரக்தி அடைந்த முதியவர் மாயம்.
16 கால் மண்டபம் அருகே மகனும், மருமகளும் பிரிந்து வாழ்வதால், விரக்தி அடைந்த முதியவர் மாயம். கரூர் மாவட்டம், மன்மங்கலம் தாலுக்கா, பஞ்சமாதேவி அருகே உள்ள 16 கால் மண்டபம் பகுதியை சேர்ந்தவர் அன்பழகன் மகன் சந்துரு வயது 38. இவரது மனைவி கௌசல்யா தேவி. இருவருக்கும் ஏற்பட்ட குடும்ப பிரச்சனை காரணமாக கடந்த 7 1/2 வருடங்களாக தனித்தனியாக வசித்து வருகின்றனர். இதனால் விரக்தி அடைந்த சந்துருவின் தந்தை அன்பழகன் வயது 67 என்பவர், அக்டோபர் 24ஆம் தேதி காலை 10 மணி அளவில் வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. வழக்கமாக அவர் செல்லும் இடங்களில் தேடி பார்த்தும், அவரது நண்பர்களிடம் விசாரித்து பார்த்தும், உறவினர்கள் வீட்டில் தேடிப் பார்த்தும் எவ்வித தகவலும் கிடைக்கப் பெறாததால், சந்துரு இது குறித்து காவல் நிலையத்தில் தனது தந்தையை காணவில்லை என புகார் அளித்துள்ளார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, மாயமான அன்பழகனை தேடி வருகின்றனர் வாங்கல் காவல் துறையினர்.