உரிய ஆவணமில்லாததால் 1.70 லட்சம் பறிமுதல்

கீழ்வேளூரில் தேர்தல் பறக்கும் படையினர் 2 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் ஆவணமில்லாத ரூ. 1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2024-04-02 06:00 GMT

 கீழ்வேளூரில் தேர்தல் பறக்கும் படையினர் 2 இடங்களில் நடத்திய வாகன சோதனையில் ஆவணமில்லாத ரூ. 1.70 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.  

நாகை மாவட்டம் கீழ்வேளூர் தொகுதியில் 2 இடங்களில் வாகன சோதனையில் 1,70,000 பறிமுதல் நாகை மாவட்டம் கீழ்வேளூர் சட்டசபை  தொகுதிக்கு உட்பட்ட நாகை- தஞ்சாவூர் புறவழி சாலையில் உள்ள கீழ்வேளூர் பிரிவு சாலை  பகுதியில் நேற்று  தேர்தல் பறக்கும் படை அதிகாரி  சாமி நாதன் மற்றும் போலீசார்  வாகன சோதனை மேற்கொண்டனர் அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை நிறுத்தி அவர் வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அந்தப் பையில் ரூ. 86 ஆயிரத்து 800  பணம் இருந்தது.

பறக்கும் படையினர்  விசாரணை மேற்கொண்ட போது மோட்டார் சைக்கிளில் வந்தவர் வேளாங்கண்ணி அருகே பிரதாமராமபுரம் வடக்கு தெருவை  சேர்ந்த பாலசுப்பிரமணியன்    என்பதும்,     அவரிடம்  அதற்கு உரிய  ஆவணங்கள்  இல்லாததால்  பணத்தை   அதிகாரிகள் பறிமுதல் செய்து, . செய்த  கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ரேணுகா தேவி, கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்  கவிதாஸ்   இடம்  ஒப்படைத்தனர் பறிமுதல் செய்யப்பட்ட  பணத்தை   கீழ்வேளூர்  சார் நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர். இதேப்போல்  கீழ்வேளூர் சட்டசபை  தொகுதிக்கு உட்பட்ட கீழ்வேளூர் -‌கச்சனம்  சாலையில் உள்ள கொளப்பாடு சோதனை சாவடியில் நேற்று மாலை தேர்தல் நிலையான கண்காணிப்பு குழு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் போலீசார்  வாகன சோதனை மேற்கொண்டனர்

அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த திருத்துறைப்பூண்டி தாலுகா கச்சனம் தெற்கு தெருவை சேர்ந்த பழனி வைத்திருந்த பையில் சோதனை செய்தனர். அதில்   ரூ.85 ஆயிரத்து 950 பணம் இருந்தது.  அதற்கு உரிய  ஆவணங்கள் இல்லாததால்  பணத்தை  பறிமுதல் செய்து கீழ்வேளூர் தாசில்தார் அலுவலகத்தில் கூடுதல் உதவி தேர்தல் அலுவலர்  கவிதாஸ் , தாசில்தார் ரமேஷ்  ஆகியோர் இடம் ஒப்படைத்தனர் . பறிமுதல் செய்யப்பட்ட  பணம்  கீழ்வேளூர்  சார் நிலை கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது

Tags:    

Similar News