17.5 கிலோ கஞ்சாவுடன் 8 பேர் கைது

மதுரை மாவட்டம் மேலூரில் 17.5 கிலோ கஞ்சா,ரூ 6.36 லட்சத்துடன் 8 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2024-12-21 15:41 GMT
மதுரை மாவட்டம் மேலூர் மதுவிலக்கு ஆய்வாளர் மாரிமுத்து, உதவி ஆய்வாளர் அழகர்சாமி தலைமையிலான போலீசார், கஞ்சா விற்பவர்களை பிடித்து விசாரித்ததில், உசிலம்பட்டி பெரியபுறவக்குடியில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மொத்த வியாபாரிகள் என தெரிந்தது. ராஜாங்கம்(60) மனைவி பரமேஸ்வரி54) மகன் சதீஷ்(32), மருமகள் திவ்யா(27) ஆகியோரை கைது செய்து அவர்களிடமிருந்து 17.5 கிலோ கஞ்சா ரூ.6.36 லட்சத்தை பறிமுதல் செய்து மொத்தம் 8 பேரை இன்று( டிச.21) போலீசார் கைது செய்தனர். .

Similar News