திருவாரூரில் வரும் 18ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை ஆட்சி மொழி சட்டவாரம்
ஆட்சி மொழி சட்டவாரத்தை சிறப்பாக கொண்டாட மாவட்ட நிர்வாகம் முடிவு செய்ததுள்ளது
Update: 2023-12-16 01:26 GMT
தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் தமிழ் ஆட்சி மொழி சட்டம் இயற்றப்பட்ட நாளை நினைவு கூறும் வகையில் வரும் 18ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை திருவாரூர் மாவட்டத்தில் ஒரு வார காலத்திற்கு ஆட்சி மொழி சட்டவாரம் கொண்டாடப்பட உள்ளது. வரும் 18ம் தேதி முதல் 27ஆம் தேதி வரை மாவட்டங்களில் உள்ள அரசு அலுவலகங்கள், வணிக நிறுவனங்கள் ,கடைகள் உணவகங்கள் முதலானவற்றில் ஆட்சி மொழி சட்டவிரத்திற்கான ஒட்டுவில்லைகளை ஒட்டியும்,துண்டறிக்கை மற்றும் அரசாணையினை வழங்கியும் கொண்டாடப்பட உள்ளது. ஆட்சி மொழி சட்ட வாரத்தினை சிறப்பாக கொண்டாட அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட ஆட்சியர் சாரு ஸ்ரீ தகவல் தெரிவித்துள்ளார்.