மதுரையில் 3 ஆண்டுகளில் 19,784 போதை மாத்திரை பறிமுதல்- காவல் ஆணையர்
மதுரை மாநகரில் 3 ஆண்டுகளில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,784 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது. விதிகளை மீறி போதை மாத்திரை மற்றும் மருந்துகள் விற்பனை செய்தால் மருந்தக உரிமத்தை ரத்து செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேசினார்.
மதுரை மாநகர காவல்துறை சார்பில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கில் நடைபெற்றது. இதில் மதுரை மாநகரில் உள்ள மருந்துநிறுவனம், கடை, மற்றும் பார்சல் சேவை நிறுவன உரிமையாளர்கள் மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர். இதில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்தும், விற்பனையை தடுக்கும் நோக்கிலும் அனைத்து மருந்துகடைகள் மற்றும் பார்சல் சேவை நிறுவனத்திற்கு காவல்துறை சார்பில் ஆலோசனை வழங்கப்பட்டது.
இதை தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய மாநகர காவல் ஆணையர் லோகநாதன் பேசியபோது : மாநகர காவல்துறையும் மாவட்ட உணவுப்பாதுகாப்புத்துறையுடன் இணைந்து மதுரையில் குட்கா விற்பனை செய்ததாக கடந்த நான்கு ஆண்டுகளில் 2068 வழக்குகள் பதிவு - 2174 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாநகர் பகுதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தவர்களை அதிரடியாக தொடர்ந்து கைது செய்து வருகிறோம் என்றார். 2021 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 2068 வழக்குகள் பதிவு - குட்கா பொருட்களை கடத்தியதாக சுமார் 2171 நபர்கள் கைது - 1.05 கோடி மதிப்பிலான 13 ஆயிரத்து 274 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 43 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று மதுரை மாநகர போதைப்பொருள் தடுப்பு பிரிவு காவல்துறை சார்பில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக கடந்த 3 வருடங்களில் 1425வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளது இதில் 1 கிலோவிற்கு கீழ் 1053 வழக்குகளும்,்1 முதல் 20கிலோ வரை -334 வழக்குகளும், , 20கிலோவிற்கும் மேலாக வணிக ரீதியாக அதிகமாக 38வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 3 வருடங்களில் 6ஆயிரம் கிலோ கஞ்சா பறிமுதல் செய்துள்ளோம் எனவும், மதுரை மாநகரில் கஞ்சா கடத்தியது மற்றும் விற்பனை செய்த வழக்குகளில் 2045 குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை என 416 வழக்குகளில் நீதிமன்றம் மூலமாக தண்டனை கிடைக்கப்பெற்றுள்ளது மேலும் இதுவரை 3 ஆண்டுகளில் 18 கஞ்சா வழக்குகளில் வழக்குகளில் 10 ஆண்டுகளுக்கு மேலான குற்றவாளிகளுக்கு தண்டனை மற்றும் தலா 1லட்சம் அபராதமும் நீதிமன்றம் பெறப்பட்டுள்ளது என்றார்.
மாநகரில் 3 ஆண்டுகளில் கஞ்சா வழக்கில் 1.4. கோடி சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. இதே போன்று மதுரை மாநகரில் 3 ஆண்டுகளில் போதை மாத்திரை விற்பனை தொடர்பாக 18 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 19,784 மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதுவரை கஞ்சா மற்றும் போதை மாத்திரை வழக்கில் 31 பேர் குண்டா் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். மாநகர் காவல்துறை சார்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளல் மதுரை மாநகரில் கஞ்சா விற்பனை புகார் குறைந்துள்ளது என்றார். மேலும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படுகிறது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் ANTI DRUG CLUB தொடங்கியுள்ளோம். இதன் மூலம் கல்வி நிறுவனங்களில் போதை பயன்படுத்தும் நபர்கள் குறித்து கண்காணித்து புகார் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் மேலும் போதை பொருள் விற்பனை மற்றும் கடத்தல் தொடர்பாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலக பேஸ்புக் பக்கத்திலும் புகார் அளிக்கலாம் என்றார்.
மதுரை மாநகரில் மருந்துக்கடை உரிமையாளர்கள் மருத்துவர்கள் சீட்டு இன்றி மாத்திரைகள் கொடுக்க கூடாது, RECENT PRESCRIPTION இருந்தால் மட்டுமே மருந்துகள் வழங்க வேண்டும் எனவும், மருந்துகடைகளில் சில மாத்திரைகளின் பெயர்களை பதிவிட்டு PRESCRIPTION இருந்தால் மட்டுமே தரப்படும் என நோட்டீஸ் ஒட்ட வேண்டும். மேலும் மெடிக்கல்களில் ஆவணங்களை முறையாக பராமரிக்க வேண்டும், அனைத்து மெடிக்கல்களிலும் CcTV கேமிராக்கள் வைக்க வேண்டும் என்றார் கூரியர் பார்சல் நிறுவனங்கள் பார்சலில் சந்தேகம் இருந்தால் , சந்தேக முகவரி இருந்தால் காவல்துறைக்கு தகவல் அளிக்கலாம், SCANNER மூலமாக சந்தேகத்திற்குரிய பொருள் பார்சல்களை தெரிந்துகொள்ளலாம்.
பார்சல் சேவைகளில் பணிபுரியும் நபர்களே இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடுவதாக சில வழக்குகளில் தெரியவந்துள்ளது இதுபோன்றவற்றை மீறும் போது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மற்ற மாநிலங்களில் இருந்து மருந்து வந்தால் கொரியர் சர்வீஸ்சில் காவல்துறைக்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டு பேசிய லோகநாதன் பல்வேறு போதை தரும் மருந்துபொருட்களை PRESCRIPTION இன்றி விற்பனை செய்தால் விற்பனையாளர்களும் குற்றவாளிகளாக ஆக்கப்படுவீர்கள்.. இதனால் மருந்தக லைசென்ஸ் ரத்து செய்யப்படும், மருத்துவத்துறை காவல்துறை விதிகளை மீறி மருந்துகளை விற்பனை செய்தால் அனைவரும் குற்றவாளி தான் என்றார் கஞ்சா, குட்கா கிடைக்காதபோது மாணவர்கள் போதை மருந்து மற்றும் மாத்திரகளை. நாடும் நிலை உள்ளது இதனை தடுக்க மெடிக்கல் உரிமையாளர்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என்றார்.