சோழங்குரணியில் ஆடுகளை திருடிய 2 பேர் கைது!
சோழங்குரணியில் 4 ஆடுகளை திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மதுரை திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட வலையங்குளம் அருகே சோழங்குரணி கிராமத்தில் பொன்னுசாமியின் மகன் நரசிங்கம் (71) வசித்து வருகிறார்,நரசிங்கம் ஆடு மேய்ப்பது வழக்கம் இவருக்கு சொந்தமாக 20கும் மேற்பட்ட ஆடு மற்றும் கிடாய்கள் உள்ளது.
இந்த நிலையில் கடந்த டிசம்பர் மாதம் ஆறாம் தேதி அன்று நரசிங்கம் வழக்கம்போல் ஆடு மேய்த்து விட்டு ஆடு மற்றும் கிடாய்களை வீட்டில் கட்டி போட்டு உள்ளார். மறுநாள் காலை நரசிங்கம் ஆடு மேய்ப்பதற்காக ஆடுகளை செல்ல முற்பட்டபோது மூன்று ஆடுகள் மற்றும் ஒரு கிடாய் காணாமல் போனது தெரியவந்தது. இதனை தொடர்ந்து நரசிங்கம் அருகில் உள்ள இடங்களில் ஆடுகளை தேடி உள்ளார், வெகு நேரம் ஆகியும் ஆடுகள் கிடைக்காததால் உடனடியாக பெருங்குடி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.
இத்தகவல்யறிந்து விரைந்து வந்த பெருங்குடி காவல்துறையினர் ஆடுகள் மற்றும் கிடாய் காணாமல் போனது குறித்து விசாரணை மேற்கொண்டனர், இரு முதியவர்கள் ஷேர் ஆட்டோவில் வந்து மூன்று ஆடுகள் மற்றும் ஒரு கிடாயை தூக்கி கொண்டு பெருங்குடி காவல் துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.
பின்னர் டோல்கேட்டில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்தபோது ஆடுகளை கடத்திக்கொண்டு திருப்புவனம் வழியாக சென்றது தெரியவந்தது, உடனடியாக பெருங்குடி காவல்துறையினர் திருப்புவனம் காவல் சோதனை சாவடியில் பணியில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர். இத்தகவலின் பெயரில் மதுரையில் இருந்து திருப்புவனம் நோக்கி வந்து கொண்டிருந்த ஷேர் ஆட்டோவை சோதனை செய்ததில் ஐந்துக்கும் மேற்பட்ட ஆடுகளை கடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது.
ஆட்டோவில் கிடாய்களை கடத்தி வந்த சாக்கிலிபட்டியை சேர்ந்த முருகன் மற்றும் வடிவேலுவை ஆகிய இரு இருவரையும் திருப்புவனம் காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.