மின்சாரம் தாக்கி 2 வயது குழந்தை பலி

கலிங்கமுடையான்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் எதிர்பாராவிதமாக, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.;

Update: 2023-12-07 13:30 GMT

 கலிங்கமுடையான்பட்டியில் விளையாடிக் கொண்டிருந்த 2 வயது சிறுவன் எதிர்பாராவிதமாக, மின்சாரம் தாக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த கலிங்கமுடையான்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது 2 வயது குழந்தை சர்வேஷ். பெருமாள், இன்று ( 07.12.2023 ) அதிகாலை வழக்கம்போல பால் கறவைக்கு சென்று விட்டார். வீட்டில் மனைவி மற்றும் குழந்தை இருந்துள்ளனர்.குழந்தையின் தாய், வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தபோது விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சர்வேஷ் அருகே மின் மோட்டாருக்கு செல்லும் வயரில் கையை வைத்து விட்டதாக கூறப்படுகிறது.

Advertisement

அந்த வயரில் மின் கசிவு இருந்ததால் குழந்தையை மின்சாரம் தாக்கியது. இதில் தூக்கி எறியப்பட்ட குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதனைப் பார்த்து கதறி அழுத குழந்தையின் தாய் இதுகுறித்து கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் வீட்டுக்கு விரைந்து வந்து கதறி துடித்தார். இதுகுறித்து துறையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மின்சாரம் தாக்கி இரண்டு வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News